உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி, IPCMC என்னும் போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் போலீஸ்காரர்களை கிரிமினல்களைக் காட்டிலும் மோசமாக நடத்தும் எனக் கூறியதின் வழி அந்த ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“அந்த IPCMC அரசமைப்பு முதல் இயற்கை நீதி வரை எல்லாவற்றையும்
மீறுகின்றது. அது நீதிமன்ற அதிகாரத்தை ஒதுக்குகின்றது. இறுதித் தீர்ப்பு வழங்கும் அமைப்பாகவும் அது மாறுகின்றது.”
“ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கும் ஒருவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு உரிமை இல்லாத நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் போலீஸ்காரர்களை கிரிமினல்களைக் காட்டிலும் மோசமாக நடத்துகிறீர்கள்,” என்றார் அவர்.
பரிந்துரை செய்யப்பட்டுள்ள IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு மாத அவகாசத்தை வான் ஜுனாய்டி கடந்த ஜுன் மாதம் 4ம் தேதி கோரியிருந்தார்.
அந்த ஆய்வின் முடிவுகள் பற்றி வினவப்பட்ட போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.
வான் ஜுமைடி … போலிஸ் காரர்களும் பொதுமக்களைப் போன்றவர்கள்தாம். வேலைகளில் வேறுபாடு இருக்கலாம்; உரிமைகள் போலீஸ்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் சமமானதே. தவறும், தப்பும் யார் செய்தாலும் தண்டனை ஒரேமாதிரியாகத்தான் இருக்கவேண்டும். நிராயுதபாணியாக வரும் ஒருவரை கைதுசெய்து விசாரணைக்கு உரிமைகோரும்போது , அந்த நபரின் முழு பாதுகாப்பும் போலிஸ் தரப்பு உறுதிசெய்யவேண்டும். அது போலிச்தரப்பின் முழு உரிமையாகும். போலிசை நம்பி தம் பிள்ளைகளை விசாரணைக்கு அனுப்பிவைக்கும் பொதுமக்கள், தம் பிள்ளை பிணமாக வெளியே வந்தால் ,நீதிக்காக போராடத்தான் செய்வார்கள். நீதியைப் பெற நல்லதொரு மார்க்கத்தைத் தேடுவது எப்படி போலீசாரைக் கிரிமினல்களைவிட மோசமாக நடத்துவது என்பதாகும்? குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் கிரிமினல்தான்.அவர்களைக் கிரிமினலைப் போலத்தான் நடத்தவேண்டியிருக்கும். இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது?
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் ……!
போலீஸ் வருமானம் மக்களின் வரி பணத்தில் இருந்து, ஆக …….!
உமது எஜமான் மக்கள்……..!
சட்டம் எல்லோருக்கும் சமம்….!
போலிஸ்காரர்கள் கிரிமினல்களை விட மோசமாகத்தானே நடக்கின்றனர்.
குற்றம் என்பது எல்லோருக்கும் பொருந்த வேண்டும்….
நேர்மையுடன் பணிபுரியும் போலிஸ் அதிகாரிகளை யாரும் குறைகூறவில்லை…அவர்களுக்கு தலை வணங்குகிறேன்…
அயோக்கிய போலீசையே நாங்கள் கேள்வி கேட்கிறோம்…அவர்களை குற்றவாளிகளாக நடத்தினால்தான் என்ன தவறு இருக்கிறது?????
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்திலே உண்டு.