குற்ற விகிதம் மீது அரசாங்கத்தின் முரண்பாடான கூற்றுக்கள்

1 limநாட்டில் குற்றச் செயல் நிலவரம் மோசமடைந்துள்ளது என கடந்த நான்கு  ஆண்டுகளாக பொது மக்கள் கூறி வருவதை உள்துறை அமைச்சர் அகமட்  ஸாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளதாக கேலாங் பாத்தா டிஏபி எம்பி லிம் கிட்  சியாங் கூறுகிறார்.

அதே வேளையில் குற்றச் செயல்களுக்கு எதிரான அரசாங்க உருமாற்றத்  திட்டங்கள் குற்ற விகிதம் பெரிதும் குறைவதற்கு உதவியுள்ளதாக பிரதமரும்  முன்னைய உள்து றை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் போலீசும்  சொல்லியுள்ள கருத்துக்கள் தவறானவை என்பதையும் அகமட் ஸாஹிட் உறுதி
செய்துள்ளதாக அவர் சொன்னார்.

ரத்துச் செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்துக்கு பதில் புதிய தடுப்புச் சட்டத்தை  அறிமுகம் செய்வது பற்றி இந்த மாதத் தொடக்கத்தில் பேசிய அகமட் ஸாஹிட்  நாட்டின் குற்ற நிலவரத்துக்குப் புதிய கோணத்தை அளித்ததாக லிம் தெரிவித்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவசர காலச் சட்டத்தையும் ரத்துச்  செய்யுமாறு எங்களுக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டது. அதற்கு பின்னர் என்ன  நடந்தது பாருங்கள். குற்ற விகிதம் கூடி விட்டது. கிரிமினல்கள் அனைவரும்  இயங்கத் தொடங்கி விட்டனர் என அகமட் ஸாஹிட் சொன்னதாக செய்திகள்  வெளியாயின.

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் குற்றச் செயல் குறியீடு உருமாற்றத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 26.8 விழுக்காடு குறைந்துள்ளதாக  நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.