குற்றச் செயல்களைக் குறைக்க பெண்களுக்கு ஆடை விதிமுறைகள் தேவை என்கிறார் பாஸ் பெண் எம்பி

pas_logoபாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பெண்கள் ‘அநாகரிமாக’  ஆடைகளை உடுத்துவதைக் தடுக்க கூட்டரசு அரசாங்கம் சட்டங்களை இயற்ற  வேண்டும் என பாஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவர் கேட்டுக்  கொண்டுள்ளார்.

குட்டை டிரவுசர்களும் குட்டை ஆடைகளும் அத்தகைய குற்றங்களுக்கு வழி  வகுக்கும் ‘அம்சங்களில் அடங்கும்’ என சித்தி ஜைலா முகமட் யூசோப் என்ற  அந்த எம்பி இன்று மக்களவையில் கூறினார்.

“குட்டை டிரவுசர்களை பெண்கள் அணியும் கலாச்சாரம்… அது ஆபாசமாக  உள்ளது. எடுத்துக்காட்டுக்கு விமானப் பணிப்பெண்கள் அணியும் ஆடைகளைப்  பாருங்கள்,” என்றார் அவர்.

அதனால் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு உடை விதிமுறைகளை  அமலாக்க வேண்டும் என சித்தி ஜைலா கேட்டுக் கொண்டார். அது பாலியல்  துன்புறுத்தலைக் குறைக்கவும் உதவும் என்றார் அவர்.

சித்தி ஜைலா பாஸ் முஸ்லிமாட் பிரிவின் தலைவியும் ஆவார்.