‘சுவாரா கெஅடிலானிடம் “பொறுப்புணர்ச்சி இல்லை”, அதனால்தான் அச்செய்தித்தாள் அதன் பிரசுர உரிமத்தைப் புதுப்பிக்க செய்துகொண்ட விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு பரிசீலிக்கவில்லை என்று அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறினார்.
“பெல்டா நொடித்துப்போனது” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்திக்கு விளக்கம்கேட்டு அமைச்சு எழுதிய கடிதத்தை அது புறக்கணித்தது அச்சக, பிரசுர சட்டத்தை மீறிய செயலாகும் என்றாரவர்.
“எங்களுக்கு விளக்கமளிக்காமல் ‘இரகசியமானது’ என வகைப்படுத்தப்பட்ட அமைச்சின் கடிதத்தையும் வெளியிட்டு விட்டது”. ஜஹிட் நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.
கெஅடிலான் நாளிதழ் தொடர்ந்து வந்தால் BN நொடித்துவிடும் என்ற பயம்தான் இவருக்கு !
மந்திரி அவர்களே, உத்துசான் மெலாயு எவ்வகையில் பொறுப்புடன் நடந்து கொள்கின்றது என்பதை அதற்க்கு எதிராக வரும் சட்ட நடவடிக்கைகளும் நீதிமன்ற தீர்ப்பையும் வைத்து பார்த்தால் அந்த பத்திரிக்கையின் உரிமம் என்றோ ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்? நடந்ததா? ஆளுக்கு ஒரு நியாயம்? நீங்கள் மற்றவரை அடித்தால் நியாயம். மற்றவர் உங்களை அடித்தால் அநியாயம்! நல்ல அமைச்சர், நல்ல நியாயம்.