பினாங்கின் புதிய சட்டமன்றத் தலைவர் லாவ் சூ கியாங், கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற பரிந்துரையைச் செயல்படுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறார்.
முந்தைய சட்டமன்றம், சட்டமன்றச் சீரமைப்புக்காக எட்டு திருத்தங்களை முன்மொழிந்திருந்தது.
“அதில் கேள்வி நேரத்தை ஒவ்வொரு நாளும் 90 நிமிடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்”, என்றாரவர்.
ஆனால், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றம் கலைக்கப்பட்டதால் அப் பரிந்துரைகள் அப்போது செயல்படுத்தப்படவில்லை. இந்தச் சட்டமன்றத்தில் அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றவர் நம்புகிறார்
ஜனநாயகம் படமெடுத்து தாண்டவமாடுகின்றதோ? பிழைக்கத் தெரியாத சபாநாகராக இருக்கின்றாரே என்று வருத்தமாக உள்ளது.