தன்மூப்பாக மதம் மாற்றப்படுவதைத் தடுப்பதற்காக தங்கள் மாநில மதம் மாற்ற சட்டங்களை திருத்துமாறு ஐந்து மாநில அரசாங்கங்களை டிஏபி தைப்பிங் எம்பி இங்கா கோர் மிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்கள் இருவருடைய ஒப்புதலும் கட்டாயமாகத் தேவை எனக் கூறும் மற்ற ஆறு மாநில மதம் மாற்றச் சட்டங்களுக்கு முரண்பாடாக அந்த ஐந்து மாநிலங்களின் மதம் மாற்றச் சட்டங்கள் இருப்பதாக இங்கா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
நெகிரி செம்பிலான், பேராக், கெடா, மலாக்கா, சரவாக் ஆகியவை அந்த ஐந்து மாநிலங்களாகும்.
கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப இருக்கும் பொருட்டு தங்கள் மாநில
அரசமைப்பைத் திருத்துமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றார் அவர்.
ஆரம்பியுங்கள் உங்கள் வேலையை. குட்டையைக் கலக்கி மீன் பிடிக்க இது சரியான தருணம். மாநில இஸ்லாமிய சட்டங்களும் மலேசியா அரசியலமைப்பு சட்டத்தை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.