பொதுத் தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கியதாக செய்த புகார்களின்மீது விசாரணையை முடித்துக்கொண்ட பினாங்கின் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) மேலும் ஒரு பக்காத்தான் ரக்யாட் எம்பி- இங் வெய் ஏய்க்- சாடியுள்ளார்.
ஏழு இடங்களில் அந்தத் தேர்தல் குற்றம் நடந்திருப்பதாக பக்காத்தான் தலைவர்கள் புகார் பதிவு செய்துள்ளபோதும் அவற்றைக் “கண்டுக்கொள்ளாமல்” சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குச் சமர்பித்த அறிக்கையில் போதுமான ஆதாரமில்லை என்பதால் அவ்வழக்கை மூடிவிடலாம் எனப் பரிந்துரைத்துள்ள மாநில எம்ஏசிசி இயக்குனர் சாமராஜூ மாணிக்கத்தை அவர் சாடினார்.
டிஏபியின் தஞ்சோங் எம்பியான இங்,“எம்ஏசிசி ஊழல்வாதிகளின் பாதுகாவலராக மாறிவிட்டதா”,என ஓர் அறிக்கையில் வினவியுள்ளார்.