அண்மைய ஆண்டுகளில் போலீசாருக்கு எதிராக புகார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது.
2008ல் போலீசுக்கு எதிராக 38 புகார்கள் கொடுக்கப்பட்ட வேளையில் 2012ல் அந்த எண்ணிக்கை 126 ஆக கூடியுள்ளது என அந்த ஆணையத்தின் 2012ம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அந்தப் புகார்களில் (2012ல் 126 புகார்கள்) தடுப்புக் காவலில் இருந்த போது கைது செய்யப்பட்ட நபர்கள் தாக்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் புகார்களும் அடங்கும்.”
“பெரும்பாலான விவகாரங்களில் தவறு செய்துள்ளதை ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட விசாரணையின் போது தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.”
‘பலத்தை அதிகமாக பயன்படுத்தியது’ என்னும் துணைப் பிரிவின் கீழ்
கொடுக்கப்பட்ட புகார்கள் எண்ணிக்கை 2011ல் 10 ஆக இருந்தது 2012ல் 34 ஆக கூடியது ,” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.