‘இஸ்லாமிய நாகரீகம்’ தனியார் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயப் பாடம்

news11713cதனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் உள்நாட்டு மாணவர்களுக்கு ‘இஸ்லாமிய  நாகரீகம்’ (Tamadun Islam) என்ற பாடத்தை கட்டாயமாக்க கல்வி அமைச்சு  எடுத்துள்ள நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி எம்பி ஒருவர் கேள்வி  எழுப்பியுள்ளார்.

பொதுப் பல்கலைக்கழகங்களின் தேவைகளுக்கு ஏற்ப ‘சீராக இருக்கும் பொருட்டு’  செப்டம்பர் முதல் தேதி தொடக்கம் தனியார் உயர் கல்விக் கூடங்களில் அந்தப்  பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

“அந்த உத்தரவை மீட்டுக் கொள்ளுமாறும் தனிப்பட்ட பல்கலைக்கழகங்கள்  தங்களது பயிற்சிகளின் தேவைகளுக்கு இணங்க அதனை முடிவு செய்ய  அனுமதிக்குமாறும் நாங்கள் கல்வி அமைச்சைக் கேட்டுக் கொள்கிறோம்,” என  டிஏபி கம்பார் உறுப்பினர் கோ சுங் சென் இன்று நிருபர்களிடம் கூறினார்.