மூன்று சுக்மா விளையாட்டாளர்களில் ஒருவர் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டு கூட்டரசுப் பிரதேச மகளிர் handball குழுவின் 19 வயதுப் பாதுகாவலர் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
18 வயது அடிப் அட்ஹா இஸ்மாயில் என்ற அந்த விளையாட்டாளர் ஜுலை மாதம் 4ம் தேதி அதிகாலை மணி 4.15 வாக்கில் செர்டாங்கில் உள்ள Universiti Putra Malaysia -வின் இரண்டாவது காலேஜில் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 ரிங்கிட் ஜாமீனை அவருக்கு நிர்ணயம் செய்தார். அந்த வழக்கு ஆகஸ்ட் 20ம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்படும்.
19 வயது மெகாட் பார்ஸெரில் பைஸ் மெகால் ரசாலி, 19 வயது முகமட் ஷாய்ஸாட் முகம ஷாபி ஆகிய மற்ற இருவர் மீது வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் அந்தப் பாதுகாவலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஜுலை 4ம் தேதி நிகழ்ந்ததாக கூறப்பட்ட அந்த பாலியல் வல்லுறவுச் சம்பவம் தொடர்பில் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று சுக்மா விளையாட்டாளர்களைக் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.