அரசாங்கம் வாக்களித்த ஒன்றரை-மாத போனஸ் பல தற்காலிக ஆசிரியர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என டிஏபி எம்பி தியோ நை சிங் கூறினார்.
கூலாய் எம்பியான அவர், தம் தொகுதியிலேயே மூன்று தற்காலிக ஆசிரியர்கள் போனஸ் கிடைக்கவில்லை என்று புகார் செய்திருக்கிறார்கள் என்றார். ஜனவரி மாதமே அது கிடைத்திருக்க வேண்டும்.
கல்வித் துறை அதிகாரிகளை விசாரித்ததில் தற்காலிக ஆசிரியர்களிடம் இப்படிப்பட்ட விவகாரங்கள் “பரவலாக” உண்டு என்று அவர்கள் தெரிவித்தார்களாம்.