எரிபொருள் விலையேற்றத்தை பயனீட்டாளர்களுக்கு மாற்றி விடும் யோசனையை கூட்டரசு அரசாங்கம் இன்னும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அதனால் இப்போதைக்கு மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை.
இவ்வாறு எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியுள்ளார்.
அந்த யோசனையை அமலாக்குவதற்கு முன்னர் சில முக்கியப் பிரச்னைகளை கவனிக்க வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
பயனீட்டாளர்களுக்கான மின் கட்டணத்தை சிறந்த முறையில் நிர்ணயம் செய்யும் Fuel Cost Pass Through (FCPT) முறையை தெனாகா நேசனல் அடுத்த ஆண்டு அமலாக்கும் என எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வளத் துணை அமைச்சர் மாஹ்ட்சிர் காலித் திங்கட்கிழமை கூறியிருந்தார்.
அப்படியா ,தைரியம் இருந்தால் ஏற்றி பாருலே ,,அப்பத்தான் இருக்குலே ஆப்பு