மே 5 தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை குறித்து கொடுக்கப்பட்டுள்ள 1,500க்கும் மேற்பட்ட புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு புக்கிட் கட்டில் பிகேஆர் எம்பி சம்சுல் இஸ்காண்டார் அக்கின் சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த அழியா மை தொடர்பில் இவ்வாண்டு ஜுன் 3ம் தேதி வரையில் 1,469 போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சு தமக்கு வழங்கிய நாடாளுமன்றப் பதிலில் குறிப்பிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
ஆனால் அந்தப் புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனரா என்ற விவரம் அந்தப் பதிலில் இல்லை என்றார் அவர்.
“ஆகவே சட்டத்துறைத் தலைவர் அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும் எண்ணிக்கையில் புகார்கள் குவிந்துள்ளன,” என்று சம்சுல் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.