அவசர காலச் சட்டம் (EO) தேவை என்பதற்கு ஸாஹிட் புள்ளி விவரங்களை வழங்குவார்

zahidஅவசர காலச் சட்டம் மீண்டும் தேவை என்பதை மெய்பிக்க உள்துறை அமைச்சர்  அகமட் ஸாஹிட் ஹமிடி அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  புள்ளிவிவரங்களை வழங்குவார்.

அந்த புள்ளிவிவரங்கள் குற்றச்செயல்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வின் வழி பெறப்பட்டவையாகும்.

இந்த நாட்டில் பெரும்பாலான கிரிமினல் நடவடிக்கைகளுக்கு 2012ம் ஆண்டு  அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள்  கைதிகள் திட்டமிட்டுள்ளது அந்த ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவர்  சொன்னார்.

“சிலாங்கூரில் 90 விழுக்காடு குற்றச் செயல்களை அவசர காலச் சட்டத்தின் கீழ்  தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகள் மேற்கொண்டதற்கான புள்ளி  விவரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன,” என்றும் அகமட் ஸாஹிட் சொன்னார்.

“அவசர காலச் சட்டத்துக்கான தேவையை நிரூபிக்க நான் செப்டம்பர் மாதம்  மக்களவை கூடும் போது புள்ளி விவரங்களையும் ஆய்வு முடிவுகளையும்  தெரிவிப்பேன்,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

TAGS: