பொதுத் தேர்தலுக்கு அழியா மையை வழங்கிய விநியோகிப்பாளருடைய பெயர்- ‘குழப்பமும் மோதலும்’ ஏற்படுவதைத் தடுக்க ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
அரச உரை மீதான விவாதத்தை பிரதமர் துறைக்காக நேற்று நிறைவு செய்து வைத்துப் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
தேர்தல் நடைமுறையைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் குறியிட்டுக் கொள்வதற்காக மக்கள் விநியோகிப்பாளரிடமிருந்து மையை வாங்குவதற்கு வரிசையாக நிற்பர் என ஷாஹிடான் சொன்னார்.
“நாங்கள் தெரிவித்தால் அவர்கள் அந்த மையை வாங்க வரிசையாக நிற்பார்கள். பின்னர் தங்கள் விரல்களில் மையை தோய்த்து விடுவார்கள். அடுத்து அவர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று என்னிடம் மை உள்ளது. நான் அடையாளக் கார்டைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பார்கள்,” என்றார் அவர்.
ஐயோ! நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை! இன்னொன்றையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.இதன் மூலம் அந்த விநியோகிப்பாளர் எத்தனை லட்சாபதிகளை உருவாக்கி இருக்கிறார் என்பதும் வெளியாகிவிடும்! அதனால் அது ரகசியமாகவே இருக்கட்டும்!