‘IPCMC-யை நிராகரிக்க ‘தொழில்நுட்ப பிரச்னைகளை’ காரணம் காட்ட வேண்டாம்’

news12713cIPCMC எனப்படும் போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைப்பதற்கு ‘தொழில்நுட்ப பிரச்னைகள்’ தடையாக இருப்பதாக  கூறுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கெரக்கான் தலைமைச்  செயலாளர் மா சியூ கியோங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த IPCMC, விசாரிக்கப்படும் போலீஸ்காரர்கள் முறையீடு செய்து கொள்வதற்கும்  சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கும் உள்ள உரிமைகளைப் பறிப்பதாக  உள்துறை துணை அமைச்சர் கூறியுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.

அதற்கு மாறாக IPCMC மலேசிய அரசமைப்பு வடிவத்துக்குள் அமைந்திருப்பதால்  ‘தனது கடமைகளை ஆய்வு செய்வதற்கான வழியாக’ அதனைப் போலீஸ் படை  வரவேற்க வேண்டும் என அவர் சொன்னார்.

“IPCMC-யை அமைப்பது நமது சொந்த உறுதியைப் பொறுத்துள்ளது. பொது மக்கள்  விடுத்துள்ள நியாயமான கோரிக்கையை நிராகரிப்பதற்கு தொழில் நுட்ப  பிரச்னைகளை காரணம் காட்டக் கூடாது,” என மா இன்று விடுத்த ஒர்  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.