கோலா பெசுட் இடைத் தேர்தலில் பாஸ் வேட்பாளராகக் களமிறக்கப்படும் அஸ்லான் யூசுப் ஒரு முன்னாள் அம்னோ தொகுதித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறியாமையால் அம்னோவில் சேர்ந்ததாக அவர் கூறினார்.
“அப்போது பக்குவம் இல்லை. இப்போது முதிர்ச்சி பெற்று விட்டேன். விவரம் தெரிந்தவனாகி விட்டேன்”, என்றாரவர். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்கள் அவர் அம்னோவில் இருந்தது பற்றி வினவியதற்கு அஸ்லான் இவ்வாறு விளக்கமளித்தார்.
வணிகரும் குத்தகையாளருமான அஸ்லான், 1997-இல் பாஸில் சேர்ந்தார்.
பக்குவபட்ட அஸ்லான் யூசுப், அம்னோபுத்ராக்கள் போல நயவஞ்சகர்களாக இருக்க மாட்டார் என்று நம்புவோம்!
இவர் ஒரு தவளையல்ல என்பதை பாஸ் கட்சி இடைதேர்தலுக்கு முன்பே உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.