இஸ்லாமியப் பாடம் மீது கேள்வி எழுப்பிய டிஏபி-யை இப்ராஹிம் அலி சாடுகிறார்

ibrahim aliதனியார் உயர் கல்விக் கூடங்களில் இஸ்லாமிய நாகரீக பாடத்தை அறிமுகம்  செய்வது மீது கேள்வி எழுப்பிய கம்பார் எம்பி கோ சுங் செங் ஆணவமாக  நடந்து கொள்வதாக பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலில் வருணித்துள்ளார்.

அத்துடன் கோ, அகோங்கை அவமதிப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

கட்டாயப் பாடமாக்கப்படவிருக்கும் அதனை மீட்டுக் கொள்ளுமாறு கோ கல்வி  அமைச்சைக் கேட்டுக் கொண்டிருப்பது இஸ்லாம் கூட்டரசின் சமயம், அகோங்  சமயத்தின் சின்னம் என்னும் உண்மை நிலையை மரியாதைக் குறைவாக  கருதுவதாகும் என இப்ராஹிம் சொன்னார்.

“தனியார் உயர் கல்விக் கூடங்களில் இஸ்லாமிய நாகரீகம் போதிக்கப்படுவதை  தற்காக்குமாறு நான் கல்வி அமைச்சைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.

வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தனியார் உயர் கல்விக் கூடங்களில்  எல்லா உள்நாட்டு மாணவர்களுக்கும் இஸ்லாமிய நாகரீகம் பற்றிய பாடம்  கட்டாயமாக்கப்படுவது பற்றி நேற்று கோ கேள்வி எழுப்பியிருந்தார்.