ஓராங் அஸ்லி (பூர்வ குடியினர்)-களுக்குத் தெரியாமலேயே அரசாங்கம் 1954 ஓராங் அஸ்லி சட்டத்தின் 134வது பிரிவைத் திருத்த முற்பட்டிருப்பதற்கு ஓராங் அஸ்லி உரிமைக்காக போராடும் ஒரு குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
“சட்டத் திருத்தத்தின் பிரதி எதுவும் எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறோம்”, என மலேசிய தீவகற்ப ஓராங் அஸ்லி கிராமக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திஜா யொக் சொபில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
அதன் உள்ளடக்கத்தைத் தெரிந்துகொள்ள தங்களுக்கு அதன் ஒரு பிரதி கொடுக்கப்பட வேண்டும் என்றாரவர்.
கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால், அரசாங்கம் பிரிவு 134-இல் திருத்தம் செய்யப்போவதாக ஜூன் 28-இல் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது