தடுப்புக் காவலில் இருந்தபோது இறந்த ஏ.குகன் வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்புக்கெதிராக அரசாங்கம் இன்று மேல்முறையீட்டைப் பதிவு செய்திருப்பதாக குகன் குடும்பத்தின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் தெரிவித்தார்.
அதனால் குகனின் தாயாருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும்தான் வீண் தொல்லை என்று அந்த பாடாங் செராய் எம்பி கூறினார்.
“உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி சொன்னபடி முறையீடு செய்திருக்கிறார்.
“ஜஹிட்டும் அரசாங்கமும் குகனின் குடும்பம் படும் துன்பத்தைப் பற்றியும் போலீஸ் காவலில் சித்திரவதைக்கு உள்ளாகி மரணமுறும் எண்ணற்ற மலேசியர்கள் பற்றியும் கவலைப்படவில்லை”, என்று சுரேந்திரன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
பாகன் டதோ வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வருத்தமும் வெட்கமும் பட வேண்டும். ஒரு அயோக்கியனுக்கு வாக்கு போட்டு ஒரு அபலை தாயின் வயித்தெரிச்சலை வங்கி கட்டிகொண்டீர்கள். அந்த அயோக்கியன் தான் நீதிபதி வி தி சிங்கம் அவர்களின் தீர்ப்புக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருக்கிறான். இன்னமும் அவன் போடும் வாய்கரிசியை வங்கி கொண்டு அந்த ஏழை தமிழ் தாயின் சாபம் அதை வங்கி கொள்ளுங்கள். இனி மேலாவது அவன் போடும் பிச்சை காசுக்கு மதி மயங்காமல் நம் இனத்தை சீண்டி பார்க்கும் குள்ள நரிகளை ஒட்டு போடும் பொழுது ஒதிக்கி தள்ள வேண்டும் நம் சமுதாயம்.