ரியாவ் மாநிலத்தில் தோட்டங்களை உருவாக்குவதற்கு நிலத்தைத் துப்புரவு செய்வதற்கு காட்டுத் தீ மூட்டப்பட்டதில் சந்தேகத்துக்குரிய நிறுவனம் என மலேசிய நிறுவனம் ஒன்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரியாவ் மாநிலத்தில் தனக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைப் பகுதியில் அந்த மலேசிய நிறுவனம் பொறுப்பற்ற முறையில் எரியூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இந்தோனிசிய தேசியப் போலீஸ் படையின் பேச்சாளர் ரோனி எப் சொம்பி சொன்னார்.
“அங்கு மூண்ட நெருப்புக்கு அந்த நிறுவனமே பொறுப்பாகும். அது சந்தேகத்துக்கு உரியது. என்றாலும் அந்த எரியூட்டும் நடவடிக்கைக்கு பொறுப்பான நிறுவனத்தின் ஊழியர்கள் யார் என்பதை நாங்கள் இன்னும் நிர்ணயம் செய்யவில்லை,” என அவர் சொன்னதாக ஆங்கில மொழி நாளேடான ஜகார்த்தா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.