மலேசியாவில் உள்ள வத்திகன் அலுவலகம் மூடப்பட வேண்டும் என பெர்க்காசா, ஜாத்தி விருப்பம்

news12713dகிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான தமது  அறிக்கையை மலேசியாவில் உள்ள வத்திகன் பேராளர் ஒரு வாரத்துக்குள் மீட்டுக்  கொள்ளா விட்டால் இங்குள்ள அவருடைய அலுவலகத்தை மூடுமாறு இரண்டு  மலாய் உரிமைப் போராட்ட அமைப்புக்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக்  கேட்டுக் கொண்டுள்ளன.

இறைவனைக் குறிப்பதற்கு கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப்  பயன்படுத்துவதை அங்கீகரிக்கும் மலேசிய கத்தோலிக்க தேவாலய நிலையை  பேராயர் ஜோசப் மரினோ ஆதரித்துள்ளது நியாயமானது அல்ல என பெர்க்காசா,  ஜாத்தி என்னும் அந்த இரு அமைப்புக்களும் தெரிவித்தன.

“அந்த அறிக்கையை மீட்டுக் கொள்ளுமாறு வத்திகன் தூதரைக் கேட்டுக்
கொள்வதில் முஸ்லிம், மலாய் அரசு சாரா அமைப்புக்களுடனும் தாங்களும்  இணைந்து கொள்கிறோம்,’ என ஜாத்தி தலைவர் டாக்டர் ஹசான் அலி இன்று  கூறினார்.

இதனிடையே ஜாத்தி, ஹசான் ஆகியோரது கருத்துக்களை தமது அமைப்பும்  பகிர்ந்து கொள்வதாக பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியும் அறிவித்துள்ளார்.