டாக்டர் மகாதீர்: TPPA நமது கால்களையும் கைகளையும் கட்டிப் போட்டு விடும்

mahaTPPA என்ற பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் ஏற்றத்தாழ்வானது என்றும் அது  மலேசியாவுக்கு நன்மையைத் தராது என்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் எச்சரித்துள்ளார்.

TPPA ஏற்றத்தாழ்வான பங்காளித்துவம் என வருணித்த அவர், மலேசியாவுக்கு  பாதகமான ஏற்பாடுகளே கிடைக்கும் என்றார்.

“கடந்த காலத்தில் நமது பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு  போக்கிரி நாணய ஊக வணிகர்கள் நம்மைத் தாக்கிய போது சுதந்திரமாக  இருந்ததால் நாம் அதனை எதிர்க்க முடிந்தது.”

“ஆனால் நாம் அந்த TPPA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் நமது
கால்களும் கைகளும் கட்டிப் போடப்பட்டு விடும். மூலதனக் கட்டுப்பாடுகள்  இல்லாத நிலையில் நாம் மீண்டும் காலனிகளாக்கப்பட்டு விடுவோம்,” என மகாதீர்  தமது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் சிறிய நாடுகளின்
உள்நாட்டுச் சந்தைகளில் குறிப்பாக அரசாங்கக் கொள்முதல்களில் ஊடுருவ  அமெரிக்கா மேற்கொள்ளும் இன்னொரு முயற்சியே TPPA என்றும் அவர்  சொன்னார்.