கோலா பெசுட் மக்கள் பிஎன் அரசாங்க உதவியை எப்போதும் சார்ந்திருக்கும் பொருட்டு அவர்கள் ஏழைகளாகவே வைத்திருக்கப்படுகின்றனர் எனப் பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார்.
அந்தத் தொகுதியில் 1979ல் இடைத் தேர்தல் நிகழ்ந்த போது தாம் பாஸ் தேர்தல் இயக்குநராக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு பின்னர் அங்கு எந்த மாற்றமும் இல்லை என்றார்.
“சாலைகளும் பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் சமூகத்தின் பொருளாதார நிலை மேம்பாடு காணவில்லை. மீனவர் சமூகத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேலையில்லாதவர் விகிதமும் வறுமை விகிதமும் உயர்வாக உள்ளது.”
அதனால் உதவிகளை சார்ந்திருக்கும் நிலை அதிகமாக உள்ளது. ஆகவே கோலா பெசுட்டில் வறுமை அரசியல் தொடருகின்றது.”
“மக்கள் பிஎன் -னில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்ய வறுமையை பிஎன் பயன்படுத்திக் கொள்கின்றது,” என முஸ்தாபா நிருபர்களிடம் கூறினார்.