இனம் மீது ரசாக் பகிந்தாவின் புதல்வி அரசு சாரா அமைப்புடன் வாக்குவாதம்

razak bagindaஅரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிந்தாவின் புதல்வி ரொவெனா, இனம்,  தேர்தல் சீர்திருத்தங்கள் மீது Tindak Malaysia தலைவர் வோங் பியாங் யாவ்-உடன்  வாக்குவாதத்தில் இன்று ஈடுபட்டார்.

வோங், கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்றத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி  தாம் சமர்பித்த கட்டுரையில் இன விஷயத்தைக் குறிப்பிடாதது குறித்து ரொவெனா  கேள்வி எழுப்பினார்.

மலேசியர்கள் இன்னும் இன அடிப்படையில் வாக்களிப்பதாகவும் சிறுபான்மை  சமூகம் எப்படி மலாய் பெரும்பான்மையோரின் நிலையைப் பாதுகாக்க முடியும்  என்றும் அவர் வினவினார்.

அவருக்குப் பதில் அளித்த வோங், ரொவெனாவின் கேள்வி வினோதமானது  என்றார். காரணம் சிறுபான்மையோரைப் பெரும்பான்மையோர் தான் பாதுகாப்பது  வழக்கம் என்றார் அவர்.

“சிறுபான்மையோர் பெரும்பான்மையோரைப் பாதுகாக்க வேண்டும் என நீங்கள்  கேட்கின்றீர்கள். சிறுபான்மையோர் தங்களையே பாதுகாத்துக் கொள்ள  முடியவில்லை. அவர்கள் எப்படி மற்றவர்களைப் பாதுகாக்க முடியும்,” என வோங்  வினவினார்.