IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் குறித்து விவாதம் நடத்த வருமாறு பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ விடுத்த சவாலை உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் வெறும் கால விரயம் என அதனை நிராகரித்துள்ளார்.
அந்த ஆணையத்தை அமைப்பதை 2009ம் ஆண்டிலேயே அரசாங்கம் நிராகரித்து விட்டதால் அத்தகைய விவாதத்தினால் எந்தப் பயனும் இல்லை என அவர் சொன்னார்.
“அதற்குப் பதில் அரசாங்கம் EAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.”
கோபிந்த் சிங் மலிவான விளம்பரத்தைத் தேடுகிறார் என்றும் வான் ஜுனாய்டி கூச்சிங்கில் குறிப்பிட்டார்.
– பெர்னாமா
விடு கோபிந்த் அவனுக்கு அது இல்லையாம் நம்ம MIC போல