‘IPCMC குறித்து பெரும்பான்மை போலீஸ்காரர்கள் அஞ்சவில்லை’

IPCMC- police men fear notIPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைப்பது பற்றி போலீஸ்காரர்களில் பெரும்பாலோர் கவலைப்படவில்லை என கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள்  தலைவர் மாட் ஜைன் இப்ராஹிம் சொல்கிறார்.

IPCMC பற்றி உண்மையில் அதிகம் கவலைப்படுகின்றவர்கள் முன்னாள் தேசியப்  போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி  பட்டெய்லும் தான் என அவர் கூறிக் கொண்டார்.

அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட கறுப்புக் கண் சம்பவத்தில் ஆற்றிய பங்கிற்காக அவர்கள் கவலைப்பட வேண்டும் என மாட் ஜைன் சொன்னார்.  அந்த வழக்கில் மாட் ஜைன் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றினார்.

“தங்களுக்குக் கட்டுப்பாடும் செல்வாக்கும் இல்லாத IPCMC போன்ற அமைப்புக்கள்  இயங்கினால்- அவை தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்தால்  தங்கள் கதை முடிந்தது என அவர்களுக்கு தெரியும். அவர்களுடன் மேலும் பலரும்
வீழ்ச்சி அடைவார்கள்,” என்றும் மாட் ஜைன் தெரிவித்தார்.