‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது மலேசியாவுக்கான வத்திகன் தூதர் பேராயர் ஜோசப் மரினோ அறிக்கை விடுத்திருக்கக் கூடாது என பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹ்ரோம் சொல்கிறார்.
அந்த அறிக்கை பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி விட்டது என்றும் அது தேசிய ஒற்றுமையைப் பாதிக்கக் கூடும் என்றும் அவர் சொன்னார்.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் எந்தத் தரப்பும் அத்தகைய அறிக்கையை வெளியிடக் கூடாது என்றார் அவர்.
‘அல்லாஹ்’ என்ற சொல்லை இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என தேசிய பாத்வா மன்றம் ஆணை வெளியிட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜமில் கிர், நீதிமன்றம் ஒரு முடிவைச் செய்யும் வரை ‘அல்லாஹ்’ என்ற சொல் மீது வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என எல்லாத் தரப்புக்களுக்கும் அறிவுரை கூறினார்.
சொந்த மத கடவுளையே வணங்க தெரியாத அடுத்தவர் மத கடவுளை இப்படி தான் வணங்க சொல்லும் . அல்ல்ஹா எனும் வார்த்தையே இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் சொந்தம். அதை கூட தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ?