மசீச: ஒரே மதத்தை மட்டும் படிப்பது இன உறவுகளுக்குப் பாதகமாக அமையும்

ஒரே ஒரு சமயத்தை பற்றி மட்டும் படிக்குமாறு மாணவர்களைக்  கட்டாயப்படுத்துவது இன உறவுகளுக்கு பாதகமாக அமையும் என மசீச மகளிர்  பிரிவு உதவித் தலைவி ஹெங் சியா கீ கூறுகிறார்.

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இஸ்லாமிய ஆசிய நாகரீகம் என்னும்  பாடத்தைக் கட்டாயமாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி அவர்  கருத்துரைத்தார்.

அத்துடன் அத்தகைய நடவடிக்கை குறுகிய சிந்தனைகளைக் கொண்ட
மாணவர்களையே உருவாக்கும் என்றார் அவர்.

“பல இனங்களையும் சமயங்களையும் பண்பாடுகளையும் கொண்ட பலவகையான  மலேசியப் பின்னணிக்கு அது ஏற்புடையது அல்ல.”

ஆகவே அரசாங்கம் அதற்குப் பதில் ஒற்றுமையான, நிலைத்தன்மையான, ஐக்கிய  நாட்டை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என ஹெங் இன்று விடுத்த  ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.