உங்கள் கருத்து ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, மலேசியாவில் கெட்டிக்கார, அறிவார்ந்த, நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தண்டிக்கப்படுவதை நினைத்தால்’
கமலநாதனைச் சாடுகிறார் மஇகா பொருளாளர்
தேவதூதன்: மஇகா பொருளாளர் ஜஸ்பால் சிங் அவர்களே, உங்களில் ஒருவரையே கேள்வி கேட்கிறீர்களே. துணிச்சலான ஆளய்யா, நீங்கள். முந்தைய தலைவர்களின் காலத்தில் இது நடக்குமா. முடியாது.
இப்படித்தான் இருக்க வேண்டும். நமக்கு ‘ஆமாம் சாமி’ தலைவர்கள் தேவையில்லை. மற்ற மஇகா தலைவர்களும் உங்களைப் பின்பற்ற வேண்டும்.
உங்கள் செய்கை இனிவரும் தலைமுறையினருக்கு நல்ல முன்மாதிரி.
கவனிப்பாளன்: கடுமையாக பாடுபட்டு சிறந்த தேர்ச்சி பெறும் மலேசிய மாணவர்களுக்கு அவர்களின் இனத்தின் காரணமாக இடம் கொடுக்கப்படாதது அநியாயத்திலும் அநியாயம்.
திறமையான இம்மாணவர்களை அந்நிய நாடுகள் கொத்திக்கொண்டு போய்விடும். அதனால் இழப்பு நமக்குத்தான்.
அம்னோவின் இந்த இனவாதத்தால்தான் மலேசியாவில் தலைசிறந்த உயர்க்கல்வி நிலையம் என்று எதுவுமில்லை. ஏனென்றால் சிறந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவதில்லை. இதனால் கல்வியின் தரம் வீழ்ச்சி கண்டிருக்கிறது.
நம்பிக்கையாளன்123: நெஞ்சு பொறுக்குதில்லையே, மலேசியாவில் கெட்டிக்கார, அறிவார்ந்த, நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தண்டிக்கப்படுவதை நினைத்தால்.
நம் கல்விமுறை வெட்கக்கேடான நிலையில் உள்ளது.
அப்துல் மாலிக்: எல்லாவற்றையும் இன அடிப்படையில்தான் பார்க்க வேண்டுமா? மலாய்க்காரர்கள் செய்தால் இனத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்றும். மற்றவர்கள் செய்தால் தகுதிமுறையின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதும் எவ்விதத்தில் நியாயமாகும்?
பக்காத்தான் உள்ளவர்கள் இப்படி மலாய்க்காரர்களைச் சாடி வந்ததால்தான் மலாய் வாக்குகள் அம்னோவுக்குச் சென்றன. மலாய்க்கார மாணவர்களில் எத்தனை பேருக்கு அவர்கள் விரும்பிய துறைகள் கிடைக்கவில்லை என்பதை மசீசவோ மஇகா எண்ணிப்பார்த்துண்டா? இல்லை. ஏனென்றால் அவர்களின் இனங்களுக்கு எதிராக மட்டும்தான் ‘பாகுபாடு’ காட்டப்படுகிறது என்பது அவர்களின் அனுமானம்.
ரெத்னம்: இந்தியர்களுக்கு 1,800 இடம் என்பதே அதிகம்தான். இந்திய மாணவர்கள், பல்கலைக்கழக நுழைவுக்குப் போதுமான புள்ளிகளைப் பெற்றிருக்கவில்லை என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியுள்ளதைக் கவனிக்கவில்லையா?
உண்மையில், கல்வி அமைச்சு இந்தியர்களுக்காக நுழைவுத் தகுதியைக் குறைத்து சலுகை காட்டியுள்ளது. அதனால்தான் 1,800 இடங்களாவது கிடைத்தன.
சிறப்பான தேர்ச்சி பெற்று இருந்தும் பல்கலைகழகத்தில் இடம் கிடைக்கவில்லையானால் என்ன செய்வது? எல்லோரும் பிரதம மந்திரி அலுவலகத்தின் முன் தர்ண போட வேண்டியதுதான்!