எம்பி: ‘கேப்டன்’ நஜிப் எல்லா நோக்கங்களையும் மறந்து விட்டார்

najib-razak aபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ‘அம்னோ தீவிரவாதிகளுக்கு அமைதியாக விட்டுக்  கொடுக்காமல்’ 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தாம் வாக்குறுதி  அளித்த சீர்திருத்தங்களை நிறைவேற்றும் துணிச்சலைப் பெற வேண்டும் என  பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.

“நமது பிரதமர் எங்கே என மலேசியர்கள் வினவுகின்றனர். நாட்டைச் சூழ்ந்துள்ள  கடுமையான சர்ச்சைகளை எதிர்நோக்குவதைத் தவிர்ப்பதற்காக அவர் மறைந்து  கொண்டு விட்டாரா என்று கூட அவர்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.”

“தமது அதிகாரத்தைக் காட்ட வேண்டிய தலைவருக்காக நாடு இப்போது வழிகாட்டி  கருவி இல்லாத கப்பலைப் போன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கேப்டன்  இல்லாததால் முதல் நிலை அதிகாரிகள் மோதிக் கொள்ளும் சூழ்நிலையை  மலேசியர்கள் காண்கின்றனர்,” என புவா விடுத்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து மலேசியர்களுக்கும் தம்மை சீர்திருத்தவாதியாகக் காட்டிக் கொண்டுள்ள” நஜிப், நாட்டில் எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகள் மீதான மௌனத்தைக் கலைக்க வேண்டும்.”

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வது, 2011ம் ஆண்டு  நஜிப் ரத்துச் செய்த அவசர காலச் சட்டம் ஆகியவை மீதான விவாதங்களும்  அவற்றுள் அடங்கும்.

“குற்றங்கள் பெருகியுள்ளதற்கு அவசர காலச் சட்டத்தை நஜிப் ரத்துச் செய்ததே  காரணம் என புதிய உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி சொல்வதற்கு  நஜிப் அனுமதித்துள்ளார்.”

“அவர் பேசாமால் இருந்தால் மலேசியர்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்னைகள்  போக மாட்டா.”

“அதற்கு மாறாக சாதாரண மலேசியர்களுடைய நம்பிக்கையை மட்டுமின்றி தமது  சொந்த அரசியல் கட்சியின் நம்பிக்கையையும் இழந்து விடுவார்,” என புவா  சொன்னார்.

TAGS: