பக்காத்தான் மாநிலங்கள் மாற்றந்தாய் பிள்ளைகளாக நடத்தப்பட மாட்டா என்று சுற்றுப்பயண அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு தரப்பிலும் இரு தரப்பையும் உள்ளடக்கிய சுற்றுப் பயணக் குழு அமைக்கப்படும் தகவலை அறிவித்த போது நஸ்ரி அவ்வாறு கூறினார்.
2014 மலேசிய வருகை ஆண்டை ஒட்டி தேசிய இலக்கை அடைவதற்கு
பக்காத்தான் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களும் முக்கியமானவை என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-குடன் கூட்டாக நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
“நான் கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர் ஆகியவற்றை மாற்றந்தாய் பிள்ளைகளாக மாற்றப் போவதில்லை. நான் அவற்றை விலக்கி விட்டால் என் இலக்கை நான் அடைய முடியாது. அவை வெற்றி பெற்றால் எனக்கும் நல்ல பெயர் கிடைக்கும்,” என்றார் நஸ்ரி.
அப்படி என்றால் நீ வே…. பிறந்தவனா ??