இரண்டு அரசு மருத்துவமனைகளில் சீன மலேசிய மருத்துவர்கள் மூவர் மலாய்க்கார நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்தார்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என பினாங்கு அரசு சுகாதார அமைச்சுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
மாநிலச் சட்டமன்றத்தில் பினாங்கு துங்கால் உறுப்பினர் ரோஸ்லான் சைடின் சுமத்திய குற்றச்சாட்டு கடுமையானது என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
அது உண்மையா இல்லையா என்பதை அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் கண்டறிய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
“அது உண்மை என்றால் அம்மூவரும் பதவிநீக்கம் செய்யப்பட்டு அவர்களின் மருத்துவத் தொழில் செய்யும் உரிமமும் பறிக்கப்பட வேண்டும்”.
அதில் உண்மை இல்லையென்றால் மருத்துவர்களையும் மருத்துவத் தொழிலையும் அமைச்சர் தற்காத்துப் பேச வேண்டும்.
melayukkara மறுத்தவன் செய்திருப்பான் சீனனும் தமிழனும் இதை ஒரு நாளும் செய்ய மாட்டான்