நான்காண்டுகளுக்குமுன் ஈப்போ பாராட் மஇகா பொருளாளர் என். சிதம்பரத்தைக் கொலை செய்த குற்றத்துக்காக ஈப்போ உயர் நீதிமன்றம் மூவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
விற்பனையாளரான ஏ.மணிமாறன்,24, வியாபாரியான எஸ்.சரவணன்,29, பாதுகாவலரான கே.பெருமாள், 31 ஆகிய மூவரும் 2009, ஜனவரி 11-இல் இரவு மணி 11.30 அளவில் ஈப்போ, புந்தோங்கில் ஜாலான் வாயாங்கில் உள்ள ஒரு வீட்டில் சிதம்பரத்தைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
அவர்கள் குற்றவாளிகள் என நிறுவப்பட்டதை அடுத்து நீதித்துறை ஆணையர் தியோ சே எங், அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதற்குதான் ஹுடுட் சட்டம் வேண்டும் என்பது. இத்தகைய கொடிய மிருகங்களை நடு தெருவில் நிறுத்திக் கல்லாலே அடித்துச் சாகடிக்க வேண்டும். நீதி வெல்லும்.
அவனை கொலை செய்தது நம்ம MIC கேங்க்ச்டேர்கல்தாம்
பிற மத கோட்பாடுகளை மீரட சட்டம் வகுக்கும் ஹுடுத் சட்டம் அறிமுக படுத்தலாம்
ஹுடுட் சட்டத்தையும்,சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறையினரை கண்கானிக்கும் ஆணைய அமைப்பையும் நான் ஆதரிக்கிறேன்.
நீங்கள் சொல்லுகின்ற ஹூடுட் சட்டம் சரி தான்! அந்தச் சட்டத்திற்கு பண வலிமை உண்டு. அந்தச் சட்டத்தின் படி ஒரு பணக்காரனோ, ஒரு அரசியல்வாதியோ தண்டிக்கப் படுவதில்லை! ஒரு வலிமையற்ற சட்டத்தை வைத்துக் கொண்டு தண்டிக்கப்படுவது ஏழையாகத்தான் இருப்பான்! வேறு விதமாக சிந்தியுங்கள்.