கைரி: வத்திகன் தூதரை விஸ்மா புத்ரா கண்டிக்க வேண்டும்

khairyமலேசியாவுக்கான வத்திகன் பேராளர் பேராயர் ஜோசப் மரினோ, கிறிஸ்துவர்கள்  ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக்  கூறப்படுவது மீது அவருக்கு ஆட்சேபக் குறிப்பு ஒன்றை பிஎன் இளைஞர் பிரிவு  விஸ்மா புத்ராவை (வெளியுறவு அமைச்சு) கேட்டுக் கொண்டுள்ளது.

“அது இந்த நாட்டில் மிகவும் நுட்பமான உணர்ச்சிகரமான விஷயமாகும்,” என  அவர் அதன் தலைவர் கைரி ஜமாலுதின் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“அத்துடன் அது இன்னும் விவாதிக்கப்படும் தேசியப் பிரச்னையாகும். பேராயர்  அந்த நிலைமைக்குத் தீர்வு காண எந்த வகையிலும் உதவவில்லை. அவரது  அறிக்கை நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.”

என்றாலும் வத்திகன் பேராளர் அலுவலகம் மூடப்பட்டு மரினோ திருப்பி
அனுப்பப்பட வேண்டும் என பெர்க்காசா, ஜாத்தி போன்ற சில முஸ்லிம்
அமைப்புக்கள் கேட்டுக் கொண்டது போல அவர் கோரவில்லை.

அல்லாஹ் என்ற சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்த ஏன் அனுமதிக்கப்பட  வேண்டும் என்பது மீது மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் தயாரித்துள்ள விவர  அறிக்கை குறித்து மரினோ கடந்த வியாழனன்று பல நிருபர்களிடம் பேசினார்.

“அதற்குச் சாதகமாக சம்மேளனம் வழங்கியுள்ள வாதங்கள் நியாயமானதாகவும் ஏற்றுக்  கொள்ளத்தக்கதாகவும் தோன்றுகிறது,” என அவர் சொன்னதை கிறிஸ்துவர்கள்  அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை ஆதரிப்பதாக சில செய்தி  நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு விட்டன.