மகாதிரின் ஆங்கிலமொழி பல்டி: எம்பி சாடல்

1 mpகல்வி அமைச்சின் பெயர் மாற்றத்தைக் குறைகூறிய பிகேஆர் சுங்கை பட்டாணி எம்பி ஜோஹாரி அப்துல் அதே வேகத்தில் கணிதத்தையும் அறிவியலையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையில் (பிபிஎஸ்எம்ஐ) முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடித்த பல்டியையும் சாடினார்.

மகாதிர் 2003-இல் அறிமுகப்படுத்திய பிபிஎஸ்எம்ஐ 2011-இல் மீட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனாலும் மகாதிரும் முதலில் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதை ஒழிக்கத்தான் நினைத்தார்.

“ஆங்கிலமொழியை ஒழித்த அவரேதான் பின்னர் பிபிஎஸ்எம்ஐ-யைக் கொண்டு வந்தார்”, என்று ஜோஹாரி கூறினார்.

அதேபோல் கல்வி அமைச்சும் மூன்று முறை பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாரவர்.

“முதலில் Kementerian Pendidikan என்று அழைக்கப்பட்டது. பிறகு Kementerian Pelajaran ஆனது”.

முன்னாள் பிரதமர் பிரதமராக இருந்தபோது கல்வி அமைச்சு இரண்டானது. ஒன்று கல்வி அமைச்சு, இன்னொன்று உயர்கல்வி அமைச்சு.

“இப்போது இரண்டாம் ஒன்றாக்கப்பட்டு Kementerian Pendidikan எனப் பெயரிடப்பட்டுள்ளது.

“பிபிஎஸ்எம்ஐ போலவே இதிலும் அடிக்கடி மாற்றம். ஒரு திட்டம் இல்லை, ஆய்வு இல்லை.

“தலைவர்களின் விருப்பம்போல் மாற்றிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் முந்தைய அமைச்சரைவிட தாங்கள் பெரியவர்கள் என்ற நினைப்பு”, என்றவர் சாடினார்.