IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைக்கும் யோசனை கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப உள்ளதாக முன்னாள் தலைமை நீதிபதி முகமட் ஜைடின் அப்துல்லா கூறுகிறார்.
அவர் IPCMC, கூட்டரசு அரசமைப்பின் கீழ் சட்டப்பூர்வமானது என்பதற்கு
140வது பிரிவைச் சுட்டிக்காட்டினார்.
அரச மலேசியப் போலீஸ் படையின் நிர்வாகம், நடவடிக்கை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அரச ஆணையத்துக்கு அவர் தலைவராகப் பணியாற்றினார்.
“சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள வழியில் போலீஸ் படை உறுப்பினர்கள் மீது போலீஸ் படை ஆணையத்தின் கட்டொழுங்கு நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் ஏற்பாடுகளைச் செய்யலாம் ,”என 140வது பிரிவு சொல்வதாக ஜைடின் சொன்னார்.
IPCMCயை அமைப்பது கூட்டரசு அரசமைப்புக்கு முரணானது, நீதிக் கோட்பாட்டை மீறுகிறது என்று உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அண்மையில் கூறியிருந்தார்.