சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், தடுப்புக்காவலில் வைக்க வகை செய்யும் புதிய சட்டம் உருவாக்கப்படுவதை ஆதரிக்கவில்லை.
இதை இன்று வலியுறுத்திய அப்துல் கனி(நடுவில் இருப்பவர்) , உள்துறை அமைச்சிடமிருந்தோ வேறு அரசாங்க அமைப்புக்களிடமிருந்தோ அவசரகாலச் சட்ட(இஓ) த்துக்குப் பதிலாக தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கும் புதிய சட்டத்தின் வரைவையோ அது பற்றிய செயல்குறிப்பையோ தம் அலுவலகம் பெறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொண்டார்.
“தடுப்புக்காவலில் வைப்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்”, என்றாரவர்.