சுலு ஊடுருவலுக்கு இரண்டு வாரம் முன்னதாக அது பற்றி மாவட்ட அதிகாரி கேள்விப்பட்டார்

sulu_1இவ்வாண்டு தொடக்கத்தில் சுலு துப்பாக்கிக்காரர்கள் மேற்கொண்ட ஊடுருவலுக்கு  இரண்டு வாரங்கள் முன்னதாக அவர்கள் அதற்குத் திட்டமிடுவதாக உள்ளூர்  போலீசார் தமக்குத் தகவல் கொடுத்ததாக லஹாட் டத்து மாவட்ட அதிகாரி  சுல்கிப்லி நாசிர் கூறிக் கொண்டுள்ளார்.

ஆனால் அதனை ரகசியமாக வைத்திருக்குமாறு தமக்குக் கூறப்பட்டதாக சபா  கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் சாட்சியமளித்த  சுல்கிப்லி சொன்னார்.

லஹாட் டத்துவை சுலு துப்பாக்கிக்காரர்கள் குறி வைத்திருந்தனர் என்றும்  அதிகாரிகள் முன்கூட்டியே தலையிட்டதால் அவர்கள் லஹாட் டத்து  நகரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் தண்டுவோ-வில்  தடுக்கப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.

“அவர்களுடைய தொடக்க இலக்கு லஹாட் டத்து நகரமாகும்,” என கடந்த ஐந்து  ஆண்டுகளாக அங்கு மாவட்ட அதிகாரியாக இருக்கும் சுல்கிப்லி தெரிவித்தார்.