அரசாங்கம், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் ட்ரேன்ஸ் பசிபிக் பார்ட்னர்சிப் ஒப்பந்தத்தில் (டிபிபிஏ) கையொப்பமிட்டால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்) எச்சரித்துள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காகூட காங்கிரசில் அது பற்றி விவாதித்திருக்கிறது. ஆனால், மலேசியா அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றிய வினவல்களுக்கு இதுவரை உறுதியான விளக்கமளிக்கவில்லை என்று பிஎஸ்எம் பொருளாளர் ஏ.சிவராஜன் தெரிவித்தார்.
இன்று காலை, அக்கட்சியினர் நாடாளுமன்ற நுழைவாயிலில் டிபிபிஏ-யைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.