அல்வின் தான், விவியன் லீ என்ற இரு செக்ஸ் வலைப்பதிவாளர்கள் முகநூலில் சேர்த்த இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக கருதப்படும் பதிவுக்குப் பின்னணியில் டிஏபி இருப்பதாக மக்களவையில் பிஎன் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ராடின் சொன்னதும் அவையில் குழப்பம் ஏற்பட்டது.
அந்த வலைப்பதிவாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரிய அவர் அந்த சம்பவத்திற்கு டிஏபி மீது பழி போட்ட போட்ட போது டிஏபி எம்பி-க்கள் ஆத்திரமடைந்தனர்.
“13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த நிலை காணப்படுகின்றது. ஒரு வேளை அதற்கு டிஏபி ஆதரவு இருக்கலாம்,” என அவர் குற்றம் சாட்டினார்.
அதனை உடனடியாக டிஏபி பத்து காஜா எம்பி வி சிவகுமார், டிஏபி சிரம்பான் எம்பி அந்தோனி லோக், டிஏபி தைப்பிங் எம்பி இங்கா கோர் மிங் கண்டித்தனர்.
“அது அவதூறு அந்த அறிக்கையை மீட்டுக் கொள்ளுங்கள்,” என இங்கா உரத்த குரலில் சொன்னார்.
அதற்குப் பதில் அளித்த பங் மொக்தார் “நான் சாத்தியம் இருப்பதாக மட்டுமே சொன்னேன். குற்றம் சாட்டவில்லை,” என்றார்.
சூலுகாரன் ஓட்டுல ஜெயித்து வந்தவன் இவன் ?? இவன் இப்படிதான் பேசுவான். சபா மற்றும் சரவாக் மாநிலத்தில் உள்ள கிருஸ்தவ காரனுங்க சும்மா இருக்கிற வரையில இவன் பேச்சை நிறுத்தமாட்டான்