பேராசிரியர் :டிபிபிஏ மலேசியாவை அமெரிக்காவின் ‘அடிமையாக்கிவிடும்’

tppaட்ரேன்ஸ் பசிபிக் பார்ட்னர்சிப் ஒப்பந்தம் (டிபிபிஏ) ஒரு புதுவகை நவகாலனித்துவம் என்று கூறும் மலேசிய யுனிவர்சிடி கெபாங்சான் பேராசிரியர்  ஆகுஸ் யூசுப்  அதன் விளைவாக மலேசியா அமெரிக்காவுக்கு அடிமையாகும் நிலை உருவாகலாம் என்று எச்சரிக்கிறார்.

அது குறித்து  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்  முகம்மட்டும் எச்சரித்திருப்பதை ஆகுஸ் தம் முகநூல் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது மருந்துகளை  ஏகபோக உரிமையாக்கி மருந்துகளின் விலையை மிகவும் உயர்த்திவிடும்.  இதனால் ஏழைமக்கள் துன்புறுவர்.

டிபிபிஏ ஆவணங்களை ஏன் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவினார். அதன் உள்ளடக்கத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.