டிஏபி: மலாயன் ரயில்வேயின் தானியங்கி கட்டண வசூலிப்பு முறை எங்கே ?

ktmbகேடிஎம் பெர்ஹாட் என்ற மலாயன் ரயில்வே-க்காக 85 மில்லியன் ரிங்கிட்  செலவில் அமலாக்கப்படவிருந்த தானியங்கி கட்டண வசூலிப்பு முறை இரண்டு  ஆண்டுகளாகியும் இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை என டிஏபி எம்பி டோனி  புவா கூறியுள்ளார்.

அதனால் அந்தத் திட்டத்துக்குப் பொறுப்பான தரப்புக்கள் மீது விசாரணை  நடத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அந்தத் திட்டம் 2011 ஜனவரி மாதம் Hopetech Sdn Bhd என்ற நிறுவனத்துக்கு  கொடுக்கப்பட்டது. அது 2012 ஏப்ரல் மாதம் நிறைவு பெறத்  திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்து 2013 ஜனவரியில் தயாராகி விடும் என  அறிவிக்கப்பட்டது.

“அது முழுமை பெறுவது நீட்டிக்கப்பட்டதாலும் அலட்சியம் செய்யப்பட்டதாலும்  அந்தத் திட்டத்துக்காக கொள்முதல் செய்யப்பட்ட வன்பொருள் (hardware)  சேதமடைந்துள்ளதால் அல்லது திருடப்பட்டுள்ளதால் அல்லது காணாமல் போய்  விட்டதால் நிலைமை மோசமாக உள்ளது எனக்கு நம்பத்தகுந்த தகவல்கள்

கிடைத்துள்ளன,” என்று அந்த பெட்டாலிங் ஜெயா எம்பி ஒர் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

TAGS: