பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்களுக்காக அமைச்சரவை தலையிடும்

najib-razak aபொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் சம்பந்தப்பட்ட  விஷயத்தை அமைச்சரவை இந்த வாரம் விவாதித்து அந்த மாணவர்களுக்கு  உதவும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

“பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காததால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளது  எனக்குத் தெரியும். ஆனால் மனம் தளர வேண்டாம். அந்த மாணவர்களுக்கு எந்த  அளவுக்கு உதவ முடியும் என்பதை நாங்கள் இந்த வாரம் அமைச்சரவையில்  விவாதிப்போம்,” என அவர் இன்று தமது டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

போதுமான தகுதிகளைப் பெற்றிருந்த போதிலும் 18,000க்கும் மேற்பட்ட
மாணவர்களுக்கு உயர் கல்விக் கூடங்களில் இடம் கிடைக்கவில்லை என நேற்று  இரண்டாவது கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன் தெரிவித்திருந்தார்.

2013/2014 கல்வி ஆண்டில் முதல் பட்ட படிப்புப் பயிற்சிகளுக்கு 68,702 பேர்  விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 41,573 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது  என உயர் கல்வித் துறை கடந்த வியாழக் கிழமை அறிவித்தது.

– பெர்னாமா