அந்நியர்களிடம் ‘வியாபாரத்தை இழப்பது’ மீது உள்ளூர் வணிகர்கள் ஆட்சேபம்

news16713aஇந்த நாட்டில் அந்நியர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கும் அரசாங்கக்  கொள்கைக்கு எதிராக பினாங்கிலும் சிலாங்கூரிலும் இன்று நூற்றுக்கணக்கான  வணிகர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

கிள்ளானில் உள்ள லிட்டில் இந்தியாவில் 250க்கும் மேற்பட்ட மலேசிய இந்திய  வணிகர்கள் இன்று காலை ஒன்று திரண்டு ஆட்சேபத்தை தெரிவிக்கும் வகையில்  சுவரொட்டிகளை ஏந்திக் கொண்டு ஜாலான் தெங்கு கிளானாவில் ஒரு கிலோமீட்டர்  தொலைவுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

மலேசிய சீனர்களும் இந்திய முஸ்லிம்களும் நடத்தும் கடைகள் உட்பட 280க்கும்  மேற்பட்ட கடைகள் ஒருமைப்பாட்டைக் காட்டும் வகையில் மூடப்பட்டிருந்ததாக  மலேசிய இந்திய ஜவுளி, பொதுk கடைகள் சங்கச் செயலாளர் மகேஸ்வரி ராமசாமி  கூறினார்.

வங்காள தேசம், சீனா, இந்தியா, இந்தோனிசியா, பாகிஸ்தான் ஆகிய
நாடுகளுடனான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் வர்த்தக  விழாக்கள் தங்களது வர்த்தகத்தை பாதிப்பதாக அவர் சொன்னார்.

news16713bஎங்களுக்கு ஏற்கனவே வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர். அந்த விழாக்களும்  அந்நிய வணிகர்களும் எங்கள் வியாபாரத்தைத் திருடுகின்றனர்,” என மலேஸ்வரி  மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பினாங்கில் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற ஆட்சேபத்தில் 200 பேர் கலந்து  கொண்டனர். அங்கி 140 கடைகள் மூடப்பட்டிருந்தன. நான்கு மளிகைக் கடைகள்  மட்டும் நண்பகலுக்குப் பின்னர் திறக்கப்பட்டன.

அந்த ஆட்சேபத்தின் போது லிட்டில் இந்தியா வெறிச்சோடி பேயடித்த நகரம்  போலக் காட்சியளித்தது.

பினாங்கு லிட்டில் இந்தியா ஐநா உலகப் பாரம்பரிய பகுதியின் கீழ் வருகின்றது.  வர்த்தக விழாக்கள் வாடிக்கையாளர்களை எங்களிடம் பறித்தால் அந்த பாரம்பரிய  இடத்திற்கு அர்த்தமே இல்லை என பினாங்கு மலேசிய இந்திய வர்த்தக,  தொழிலியல் சங்கத் தலைவர் என் வசந்தராஜன் கூறினார்.

இது போன்ற ஆட்சேப நடவடிக்கைகள் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸிலும்
மலாக்காவிலும் சுங்கைப்பட்டாணியிலும் அலோர் ஸ்டாரிலும் ஈபோவிலும்  நடத்தப்பட்டுள்ளன.

TAGS: