மகாதிர்: சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதே டிபிபிஏ-இன் நோக்கம்

1 drmட்ரேன்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்தின்வழி வலிய நாடுகள் எளிய நாடுகளைக் கட்டுப்படுத்த முயல்வதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார்.

“அது, பலவீனமான நாடுகளின் சந்தைக்குள் ஊடுருவி எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவை மேற்கொள்ளும் இன்னொரு வகை முயற்சியாகும்.

“படைவலிமையால் உலகைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கும் அவை இப்போது உலகப் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்த விரும்புகின்றன”.நேற்றிரவு ஷா ஆலமில் நோன்பு திறக்கும் நிகழ்வு ஒன்றுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மகாதிர் பேசினார்.