நீடித்து வரும் அல்லாஹ் விவகாரம் மீது தாம் வெளியிட்ட கருத்துக்காக வத்திகன் பேராளர் பேராயர் ஜோசப் மரினோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டது போதாது என ஜாத்தி தலைவர் ஹசான் அலி சொல்கிறார்.
காரணம் அது முஸ்லிகளுடைய ஆத்திரத்தையும் மகிழ்ச்சியின்மையையும் நிறுத்தவில்லை என்றார் அவர்.
இந்த நாட்டில் கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பாக தாம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையை மரினோ மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ஹசான் வலியுறுத்தினார்.
“அதே நேரத்தில் அது போன்று அறிக்கையை தாம் மீண்டும் வெளியிடப்
போவதில்லை என்றும் மரினோ வாக்குறுதி அளிக்க வேண்டும்,” என்றும் ஜாத்தி தலைவர் சொன்னார்.
‘அல்லாஹ்’ விஷயம் மீதான தமது கருத்துக்களைத் தொடர்ந்து எழுந்த தவறான புரிந்துணர்வுகளுக்காக மரினோ நேற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.