2013-இலிருந்து படிப்படியாகக் கூடிவரும் தடுப்புக் காவல் மரண எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. பத்து காஜாவில் போலீஸ் காவலில் இருந்த 26-வயது ஆடவர் ஒருவர் நேற்றிரவு இறந்து போனார்.
இறந்துபோனவரின் தந்தை சியு பா காலை மணி 8.30க்கு மகனை அடையாளம் காட்ட பத்து காஜா மருத்துமனை சென்றார். அதன் தொடர்பில் அவர் போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளார்.
“அடையாளம் காணும் படலத்தின்போது அவன் காதிலும் தோள்பட்டையிலும், தொடையிலும் காயங்கள் போன்ற அடையாளங்களைக் கண்டேன்”, என்றவர் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
























