‘பழைய அடையாளக் கார்டு முறைக்கு’ புத்துயிரூட்டப்பட வேண்டும்’

sabah ic_2சபாவில் வாழும் மக்களை தீவகற்பத்தையும் சரவாக்கையும் சேர்ந்தவர்களிடமிருந்து  வேறுபடுத்திக் காட்டுவதற்கு ‘பழைய அடையாளக் கார்டு முறைக்கு’  புத்துயிரூட்டப்பட வேண்டும் என சபா மாநில சீர்திருத்தக் கட்சி (Star) தலைவர்  ஜெப்ரி கிட்டிங்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வேறுபாட்டைச் செய்வதின் மூலம், சபா சுதேசிகளை அடையாளம் கண்டு  அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என  சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் கூறினார்.

தாங்கள் சபா மக்கள் எனக் கூறிக் கொண்டு அந்த மாநிலத்தில் வாக்களிக்கும்  உரிமை உட்பட பல நன்மைகளை தனிநபர்கள் அனுபவிப்பதைத் தடுக்கவும் அது  உதவும் என்றார் அவர்.

“அதிகார வர்க்கம் குடியேற்றக்காரர்கள் பிரஜைகளாக வேண்டும் என விரும்பினால்  அவர்களை தீவகற்ப மலேசியாவுக்கு கொண்டு செல்லலாம்,” என ஜெப்ரி மேலும்  சொன்னார்.