இலங்கைப் போர் திரைப்படம் தொடர்பில் கோமாஸ் தலைவர் விசாரிக்கப்படுவார்

news17713eஇலங்கை உள்நாட்டுப் போரைச் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது  தொடர்பில் உள்துறை அமைச்சு, மனித உரிமை அமைப்பு ஒன்றின் இயக்குநரை  விசாரணைக்கு அழைத்துள்ளது.

அதனைக் கண்டித்த கோமாஸ் இயக்குநர் தான் ஜோ ஹான், அது ஒரு வகையான  அச்சுறுத்தல் என வருணித்தார்.

வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக உள்துறை அமைச்சு அலுவலகத்துக்கு  வருமாறு தம்மைக் கேட்டுக் கொள்ளும் தொலைநகல் ஒன்றை நேற்று கிடைத்ததாக தான் தெரிவித்தார்.

‘இன்று காலை தம்மை அமைச்சின் அமலாக்க அதிகாரி என அடையாளம் காட்டிக்  கொண்ட அகில்லா பாக்ரி என்பவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து  கோலாலம்பூரில் உள்ள தங்கள் அலுவலகத்தில் எனது வாக்குமூலத்தைப் பதிவு
செய்ய நான் அங்கு செல்ல வேண்டும் எனக் கூறினார்.”

“No Fire Zone, the Killing Fields of Sri Lanka” என்னும் தலைப்பைக் கொண்ட
அந்தத் திரைப்படம் இலங்கையின் உள்நாட்டுப் போரைச் சித்தரிக்கின்றது.

முதலில் ஜுலை 18ம் தேதி தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஏற்பாடு  செய்யப்பட்டிருந்ததாகவும் அது இப்போது ஜுலை 22க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்  தான் தெரிவித்தார்.